திருப்பூரில் மஞ்சள் துணி பை மக்கள் பயன்படுத்தும் வகையில் மஞ்சள் துணி பை இயந்திரம் தெற்கு MLA மற்றும் மேயர் திறந்து வைத்தனர், பொது மக்கள் துணிப்பைகளை தங்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு "மீண்டும் மஞ்சப்பை" திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நெகிழி இல்லா திருப்பூர் மாநகராட்சியாக மாற்றிட, முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையத்தில் மஞ்சப்பை இயந்திரம் அமைக்கப்பட்டு இன்று தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மேயர் என் தினேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப., துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம், தொமுச மாநில துணைச் செயலாளரும், தெற்கு மாநகர திமுக செயலாளருமான, டி கே டி மு.நாகராசன் மற்றும் வடக்கு மாநகர அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி பகுதி செயலாளர் உசேன் வட்ட செயலாளர் முகமது அலி மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பயணிகள் கலந்து கொண்டு மஞ்சள் துணி பைகளை பெற்றுக்கொண்டனர்.
No comments:
Post a Comment