தாராபுரம் தொழிற்பயிற்சி மாணவர்கள் தூய்மை பணி ஈடுபட்டனர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 7 April 2023

தாராபுரம் தொழிற்பயிற்சி மாணவர்கள் தூய்மை பணி ஈடுபட்டனர்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் நடைபெற்றது. தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவிகள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

தாராபுரம் நகராட்சி அலுவலக வளாகம் பொதுமக்கள் அதிகம் கூடும் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பைகள் மற்றும் உபயோகித்து வீசி எறியப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகளை அரசு தொழில் பயிற்சி நிலையம் மாணவ மாணவிகள் சேகரித்து பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 


நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் டாக்டர் சந்தனமாரி முன்னிலையில் 20க்கும் மேற்பட்ட தொழில் பயிற்சி நிலைய மாணவ மாணவிகள் இந்த தூய்மை பணியில் ஈடுபட்டனர்‌.இதற்கு முன்னதாக தாராபுரம் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட துவக்க விழாவிற்கு அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் சுரேஷ் குமார் பயிற்சி அலுவலர்கள் சுப்பிரமணியன் மேகலிங்கம் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நகரமன்ற தலைவர் பாபு கண்ணன் மற்றும் நகராட்சி ஆணையாளர் ராமர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்டத்தின் மூலம் நாட்டுக்கு சேவையாற்றும் சிறப்புகள் குறித்து பாராட்டு தெரிவித்து பேசினார்‌ இதில் ஏராளமான நகராட்சி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆசிரியர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.இதை பார்த்த பயணிகள் பேருந்து கீழே பிளாஸ்டிக் பாட்டில் தூக்கி எறிய கூடாது அதை அருகில் உள்ள குப்பை தொட்டில் வைக்க வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டதாக தெரிவித்தனர். 


பொது இடங்கள் சுத்தமாக இருந்தால் நோய்கள் வராமல் நாம் ஆரோக்கியத்தின் வாழ முடியும் என பயணி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad