விழாவிற்கு தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி கலந்துகொண்டு இளநிலை பயின்று விளையாட்டில் வெற்றி பெற்ற 50 மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார். அதன் பிறகு மாணவர்களிடம் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அமைச்சர் கயல்விழி பேசுகையில் தாராபுரம் அரசு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு பட்டப்படிப்பு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் நலன் கருதி முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தினை அறிவித்தவர் டாக்டர் கலைஞர் தான் அதனை தொடர்ந்து தற்போது அதே வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மாணவ மாணவியின் நலன்கருதி பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார்.
அது மட்டும் இன்றி படித்து முடித்த மாணவ மாணவிகளுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு முகாமினை 63 இடங்களில் நடத்தி சுமார் 93 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்று தந்தது திராவிட மாடல் ஆட்சிதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி தான் எனக்கு குறிப்பிட்டார். தமிழ்நாட்டிலேயே ஒரே ஆண்டில் 31 கல்லூரி திறந்த ஒரே முதல்வர் நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் மாணவர்கள் கல்வி கட்டணம் விடுதி கட்டணம் பஸ்களில் பயணம் இலவசம் என பல சலுகைகளை செய்து வருகிறார்.
கல்வி வளர்ச்சி அடைகிறது என்றால் அதற்கு பெரியார் அண்ணா கலைஞர் தான் அதை தொடர்ந்து இன்று திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்று குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் ஒருபோதும் நுழைவுத் தேர்வு அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் கயல்விழி அவர்கள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment