திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி, குட்டியகவுண்டனூர் கிராம மக்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 6. 20 லட்சம் மதிப்பில், புதியதாக அமைக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடையை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் திமுகவின் உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மோகனவள்ளி ராஜசேகரன், துணை தலைவர் விஜயகுமார், தும்பலபட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் செல்வகுமார், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment