திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் தொப்பம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டம்பாளையம் கிராமத்தில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி 2022-23 மூலம் ரூபாய் 13.90 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பெருந்தலைவர் எஸ்.வி.செந்தில் குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு,தாராபுரம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சசிகுமார், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment