திருப்பூர் புஷ்பா பேருந்து நிலையம் முதல் அவிநாசி செல்லும் ரோட்டிலும் மற்றும் அவிநாசியில் இருந்து புஷ்பா பேருந்து நிறுத்தம் வரும் ரோட்டிலும் பங்களா ஸ்டாப், குமார் நகர், மாவட்ட ஆட்சியர் இல்லம், தீ அணைப்பு நிலையம் எதிரில் ,ஆசர்மில், தண்ணீர் பந்தல், அம்மாபாளையம், பூண்டி இதையும் தாண்டி அவிநாசி வரையிலும் இரு பக்க ரோட்டிலும் பாதி ரோட்டை காணாமலும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஓட்டும் பகுதியில் 1 அடி பள்ளம் 2 அடி பள்ளம் மேடுகள் என்று இருக்கும் நிலையில் கவனம் தப்பினால் வாகன ஓட்டிகள் அந்த குழிகளில் வாகனங்களை செலுத்தும் பொழுது தடுமாறி விழுந்து வாகன விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இது நெடுஞ்சாலை துறையினருக்கு ஏனோ தெரியவில்லை அவர்கள் நான்கு சக்கர வாகனங்களில் வருவதால் அவர்கள் கண்ணில் இது படவில்லையா? குறிப்பாக மாவட்ட ஆட்சியர் இல்லம் அருகில் உள்ள போக்குவரத்து காவலர் நிற்கும் நிழற் குடை அருகில் பெரும் குழிகளில் ஒன்று தண்ணீர் திறப்பான்குழியும் உள்ளது அதன் மேல் இரும்பு மூடி போடாமல் உள்ளது (இது வரை இதற்கு வலுவான மூடி தயாரிக்கவில்லை) வேதனைக்குரிய செயலாகும் என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.
சாலை பாதுகாப்பு வாரம், மாதம் என்று நடத்தாமல் ஓட்டை உடைசல் ரோடுகளை சரி செய்யும் வாரம், மாதம் என்று நடத்தி இது போன்ற சாலைகளில் உள்ள குழிகளை சரியான முறையில் பழுது பார்க்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும் செய்யுமா நெடுஞ்சாலை துறை?
No comments:
Post a Comment