திருப்பூர் மாநகராட்சி ஒண்ணாவது மண்டலத்தில் 14 வது வார்டு ஆத்துப்பாளையம் ரோடு பகுதிகளில் ஐந்து இடங்களுக்கு மேல் நல்ல தண்ணீர் குழாய் உடைந்து இரண்டு நாட்களாக லட்சக்கணக்கான தண்ணீர் சாக்கடையில் கலக்கிறது இந்த பகுதியில் இரண்டு முறைக்கு மேல் இதுபோன்று நல்ல தண்ணீர் குழாய் உடைப்பை சரி செய்தது மாநகராட்சி இருந்தாலும் மீண்டும் மீண்டும் இந்த உடைப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இந்த பணிகளை தரமான முறையில் செய்ய வேண்டும் மாநகராட்சி இது போன்ற பணிகள் நடக்கும் பொழுது அங்கு மாநகராட்சி அதிகாரிகள் அல்லது உதவியாளர்கள் உடன் நின்று தரமான முறையில் பழுது நீக்கும் பணிகள் செய்கிறார்களா என்று பார்ப்பதில்லை இதுபோன்று தரம் இல்லாத பணிகளை செய்து மக்களின் வரிப்பணத்தை வீண் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
No comments:
Post a Comment