திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் அலங்கியம் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காகவும் பழனி பாதயாத்திரை பக்தர்கள் நடந்து செல்வதற்காக அரசின் சார்பில் கான்க்ரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அலங்கியம் பகுதியில் ஒரு சிலர் நடைபாதை ஆக்கிரமித்து வைத்துள்ளதால் பொதுமக்கள் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். 24 மணி நேரமும் வாகனங்கள் அதிகமாக வந்து கொண்டிருப்பதால் ரோட்டில் நடந்து சென்றால் விபத்துக்கள் நேர்ந்திட அதிக வாய்ப்பு உள்ளதால் நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தர அலங்கியம் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment