திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் அருகே தூய்மை நகரத்திற்க்காண மக்கள் இயக்கம், என் குப்பை எனது பொறுப்பு, என்ற திட்டத்தின் அடிப்படையில் உறுதிமொழி ஏற்று சுத்தம் சுகாதார பணிக்காக மற்றும் மக்கும் குப்பை மக்கா குப்பைகளை தரம் பிரித்து தர பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அங்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளால் கொட்டி கிடந்த ஐந்து டன் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சுத்தம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்புகண்ணன் தலைமையில் நகர மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையாளர் ராமர் முன்னிலையில் உடன் நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், மற்றும் பாண்டி செந்தில் குமார், நகராட்சி தூய்மை திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment