திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட தாராபுரம் மூலனூர், அலங்கியம், மற்றும் குண்டடம் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 86 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தொடர்பாக யாரும் உரிமை கூறப்படாதால் அந்த வாகனங்கள் தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி முன்னிலையில் திருப்பூர் மாவட்ட எஸ்பி சஷாங்சாய் உத்தரவின் பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் தனராசு, காவல் ஆய்வாளர் மணிகண்டன், ஆகியோர் மேற்பார்வையில் தாராபுரம் காவல் நிலையத்தில் வைத்து பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
சட்ட ரீதியான முறையில் மொத்தம் 86 வாகனங்கள் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்திற்கு திருப்பூர் கோவை மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான மொத்த விற்பனையாளர்கள் மற்றும் தாராபுரம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment