தாராபுரம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 6 April 2023

தாராபுரம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டின் கதவை உடைத்து எட்டு பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

தாராபுரம் கணபதி நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம் வயது 65 இவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று காலையில் 9 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றார். பின்னர் மாலையில் வீட்டுக்கு ஜீவானந்தம் வந்தார். அப்போது வீட்டின் பின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார் பிறகு பீரோவில் இருந்த பொருட்களை சரி பார்க்கும் போது துணிகள் களைந்து கிடந்தது அதில் இருந்து 8பவுன் தங்கச் சங்கிலி திருட்டுப் போனது தெரிய வந்தது இது குறித்து ஜீவானந்தம் தாராபுரம் போலீசில் புகார் கொடுத்தார்.

இவரின் புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார். ஜீவானந்தம் வெளியில் சென்றதை நோட்டமிட்ட ஆசாமிகள் அங்கு வந்து வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 8பவுன் நகையை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad