திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேரூராட்சியில் 2-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சாக்கடை பாலம் பழுதடைந்து உடைந்து விட்டது. உடைந்த கான்கிரீட் பொருட்களை சாக்கடையில் இருந்து துப்புரவு பணியாளர்கள் வெளியேற்றி போட்ட வண்ணம் உள்ளதால் அந்தப் பாலம் மக்கள் நடப்பதற்கு இடையூராகவும் வாகனங்கள் செல்வதற்கு முடியாமலும் இருப்பதால் அந்த வீதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும் இங்கே இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகமாக இருப்பதாலும் குழந்தைகள் அதிகம் இருப்பதாலும் தக்க நடவடிக்கை மேற்கொண்டு பேரூராட்சி அந்த உடைந்த பாலத்தை எப்போது சரி செய்யும்?
No comments:
Post a Comment