திருட்டுச் சம்பவம் குறித்து தாராபுரம் போலிசார் தரப்பில் கூறப்படுவதாவது தாராபுரத்தில் சில தினங்களாக அடையாளம் தெரியாத நபர்களால் நகை மற்றும் பணம் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன இந்நிலையில் தாராபுரத்தில் கடந்த 25 ஆம் தேதி அரசு பஸ் கண்டக்டர் தங்கவேல் வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5.5 பவுன் தங்கச் செயின் மற்றும் 31ஆம் தேதி அசோக் நகர் பகுதியில் கூட்டுறவு செல்லமுத்து வங்கி மேலாளர் வீட்டில் பூட்டை உடைத்து ஐந்து பவுன் நகை ரொக்க பணம் பணம் 3 லட்சம் அரைக்கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
அதேபோன்று கடந்த ஏப்ரல் 5ம்தேதி கணபதி நகரில் முன்னாள் அரசு ஊழியர் ஜீவானந்தம் வீட்டில் 8பவுன் தங்க நகைகளை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.இந்த மூன்று சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர் புகாரை பெற்ற போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்தனர். பின்னர் திருப்பூர் மாவட்ட எஸ்பி சஷாங்சாய் உத்தரவு பேரில் தாராபுரம் போலீஸ் டிஎஸ்பி தனராசு மேற்பார்வையில் தனிப்படை அமைத்து இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் கருப்புசாமி மற்றும் கலைச்செல்வன், வேலுமணி,ஆகியோர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது முதல் சம்பவம் பஸ் கண்டக்டர் தங்கவேல் வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான குற்றவாளி அடையாளத்தின் பேரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் தாராபுரம் திருப்பூர் சாலையில் ஐடிஐ கார்னர் பகுதியில் போலீஸர் வாகன சோதனை ஈடுபட்டு இருந்தபோது அடையாளம் தெரியாது இருவர் சந்தேகப்படும் படியான இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர்களை போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து கேட்டபோது தாராபுரம் பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டனர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் மாவட்ட குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் மகன் இம்ரான் வயது 35 தர்மபுரி மாவட்டம் வெங்கட்ராமன் மகன் கவியரசு வயது 25 என தெரியவந்தது அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இருந்த சுமார் 10பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 90 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment