இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட அமைப்புகுழு தலைவர் சங்கர் அவர்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து உரையாற்றினார். அப்போது ஊராட்சி முழுவதும் குப்பைகள் அகற்றாமல் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது சரியான முறையில் குடிநீர் வழங்கிடவேண்டும் ஊராட்சி முழுவதும் தார்சாலைகள் மற்றும் காங்கிரட் சாலைகள் போடவேண்டும் ஊராட்சி தலைவர் செல்வி அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோது அசையும் அசையா சொத்துக்கள் ஒரு லட்சம் மட்டுமே கணக்கில் காட்டியுள்ளார்.
தற்போது அலங்கியம் சாலை அருகில் மெட்ரோசிட்டியில் இரண்டு மனை இடங்கள் வாங்கி இரண்டு கோடி மதிப்பில் புது வீடு கட்டிவருகிறார் நரசிங்காபுரம் பகுதியில் மூன்று லட்சம் மதிப்பில் 38சென்ட் இடம் தற்போது வாங்கியுள்ளார் என்று கூறினார். அதேபோன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஊராட்சி தலைவர் செல்வி அவர்கள் காசோலையில் கையொப்பம் மற்றும் ஊராட்சி டெண்டர்கள் விட தடைவித்துள்ளார் மூன்று மாதங்கள் முன்பு ஊராட்சி நிர்வாகத்தை கலைக்க உத்தரவு போட்டுள்ளார்.
அதேபோன்று ஊராட்சி தலைவர் அவர்களிடம் கையொப்பம் பெற செல்லும் பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவாதாகவும் கூறினார். உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார் மேலும் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றாவிட்டால் இந்து மக்கள் கட்சி சார்பாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருப்பாளர்கள் ஆயிஷா சுரபி மணி கார்த்திக் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டணர் மாவட்ட பொருளாளர் கொங்கு சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment