திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி அடுத்த போச்சம்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் வயது (25) இவர் திருப்பூரில் தன்னுடன் வேலை பார்க்கும் அனுஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அனுஷா வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சுபாஷின் தந்தை தண்டபாணி இவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சுபாஷ் அனுஷா மற்றும் அவரது தாய் கண்ணம்மா வயது (65) ஆகிய மூன்று பேரை வெட்டியதில் சுபாஷ் கண்ணம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த அனுஷா வயது (23) ஊத்தங்கரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்த மகனை தந்தையே கொடூரமாக கொலை செய்ததை கண்டித்து திருப்பூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ் முத்து தலைமையில் 60க்கும் மேற்பட்டோர் ஆவண படுகொலை தடுப்புச் சட்டத்தை இயற்றக்கோரி தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அறிவழகன்,செந்தில் குமார்,விடுதலை ரவி,கான் முகமது, ஆற்றலரசு, ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment