திருப்பூர் குமரன் சாலை காலை முதல் இரவு வரை பரபரப்பாக இயங்கும் மக்கள் பயணிக்கும் சாலையாகும் இங்கு தமிழ்நாடு அர்பன் பேங்க் எதிரில் சாயப்பட்டறைகளுக்கு விறகு ஏற்றிக்கொண்டு வந்த லாரி பிரேக் பிடிக்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 கார்கள் மீதும் மக்கள் மீதும் பயங்கரமாக மோதியது இந்த விபத்தில் அந்ஒருவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க. செல்வராஜ் மற்றும் திருப்பூர் மாநகராட்சி மேயர் N.தினேஷ்குமார் மாமன்ற உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களையும் இறந்தவர் உடலையும் மீட்டு ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுபோன்று அதிக பாரம் ஏற்றுக் கொண்டு வரும் கனரக வாகனங்களை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் மேலும் இந்த வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரங்களில் மட்டும் மாநகர பகுதியில் நுழைவதற்கு அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment