தாராபுரம், கொளத்துப்பாளையம், மூலனூர் பகுதியில் ரூ.7 கோடியே 42 லட்சம் செலவில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 May 2023

தாராபுரம், கொளத்துப்பாளையம், மூலனூர் பகுதியில் ரூ.7 கோடியே 42 லட்சம் செலவில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


திருப்பூர் தாராபுரம், தாராபுரம், கொளத்துப்பாளையம், மூலனூர் பகுதியில் ரூ.7 கோடியே 42 லட்சம் செலவில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். வளர்ச்சி திட்ட பணிகள் தாராபுரம் நகராட்சி மற்றும் கொளத்துப்பாளையம் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமிபூைஜ நடந்தது. 

இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். முன்னதாக முத்துக்கவுண்டன்வலசில் ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடையை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். மேலும் முத்து கவுண்டன்வலசு முதல் கரூர் மெயின் ரோடு வரை ரூ.1 கோடியே 51 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணி, ஆலம்பாளையம் முதல் சாலரப்பட்டி வரை மற்றும் கரூர் சாலை முதல் மதுக்கம்பாளையம் வரை தார்சாலை அமைக்கும் பணி, தாராபுரம் நகராட்சி சூளைமேடு சூளைமேடு முதல் சொக்கநாதம்பாளையம் வரை சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. 


மூலனூரில் கால்நடை மருத்துவமனை புதிய கட்டிடத்த திறந்து வைத்து, கோட்டை மூலனூரில் தார்ச்சாலை அமைக்கும் பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். மொத்தம் ரூ.7 கோடியே 42 லட்சம் செலவில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- இலவச பஸ் பயணம் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் மக்களுக்கு பல எண்னற்ற நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்கள் மற்றும் சொல்லாத திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நகர பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம், தாராபுரம் மக்களின் பலநாள் கனவாக இருந்த அரசு கலைக்கல்லூரி என இன்னும் பலபல திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்துள்ளார். 


மேலும் கவுண்டையன் வலசு பகுதியில் அமராவதி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. புதுமைப்பெண் திட்டம் மூலம் ஒவ்வொரு மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. 1½ லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் பல்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டவர்களின் இல்லத்திற்கே சென்று மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் சிகிச்சை அளிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார். 

No comments:

Post a Comment

Post Top Ad