திருப்பூரில் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வி செந்தில் குமார்(VSK) அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட 900 கோடி நிதி ஒதுக்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் கர்நாடக முதலமைச்சர் சீதாராமையா அவர்களின் முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு தமிழர்களையும் தமிழ்நாட்டையும் வஞ்சிப்பவர்களுடன் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களும் திரைப்பட நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் நிறுவனரும் ஆகிய கமலஹாசன் அவர்களும் நட்பு பாராட்டுவதை அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது மேலும் கர்நாடக அரசு மேகதாது அணைக்கட்ட முயற்சித் தால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்று அறிவித்துள்ளார்.
- திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன்


No comments:
Post a Comment