அதில் அவர் கூறியுள்ளதாவது தற்போது கோடைகாலத்தில் தாராபுரம் நகராட்சி பகுதிக்கு தண்ணீர் வழங்கும் அமராவதி ஆறு வரண்டுள்ளது இதனால் ஆற்றில் உள்ள குடிநீர் கிணற்றில் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. இதனால் நகராட்சி பகுதிக்கு தினசரி நகராட்சி நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டு வந்த தண்ணீர் நேற்று முதல் 15 வார்டுகளுக்கு ஒரு நாளும் ஒரு நாள் விட்டு ஒரு நாள்15 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 15 வார்டுகளாக பிரித்து நேற்று முதல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அதே போல குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ஆழ்துளை கிணறுகளில் உள்ள தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் அதேபோல அமராவதி ஆற்றில் இருந்து நகராட்சி மூலம் வினியோக்கிப்படும் தண்ணீரையும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.இதை கோடைகாலத்தை முன்னிட்டு இந்த சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் நகர தாராபுரம் நகராட்சி பகுதிக்கு தண்ணீர் பிரச்சனை தீர்க்க அமராவதி அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என நகராட்சி சார்பிலும் நகராட்சி தலைவர் என்ற முறையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதனை ஏற்று கூடிய விரைவில் அமராவதி அணையிலிருந்து தாராபுரம் பகுதி தேவை பூர்த்தி செய்ய அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இந்த அறிவிப்பை பயன்படுத்தி 15 வார்டுகளும் ஒரு நாளும் அடுத்த நாள் அடுத்த15 வார்டுகளும் என மாறி மாறி தண்ணீர் விநியோகிக்க முடிவு செய்துள்ளோம். நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நகராட்சி தலைவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment