தாராபுரத்தில் பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய திமுக பேரூர் கழக செயலாளர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 May 2023

தாராபுரத்தில் பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய திமுக பேரூர் கழக செயலாளர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தாய் அவரது கள்ளக்காதலன் மற்றும் இரு சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தில் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்லம் கைது செய்து கடந்த 6ஆம் தேதி மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தார்.

அப்போது கொளத்துப்பாளையம் பேரூராட்சி கரையூரை சேர்ந்த கட்சி நிர்வாகியின் மகன்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் இருவர் 12 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளனர். அதற்கு ஆதரவாக குளத்துப்பாளையம் பேரூராட்சி செயலாளர் மீசை கே.துரைசாமி தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது ஆதரவாளர்கள் படைச்சூழ உள்ளே நுழைந்து அங்கு வரவேற்பு அறையில் இருந்த இன்ஸ்பெக்டர் செல்லத்தை பார்த்து நீ யாருமா? நான் யாருன்னு தெரியுமா? குளத்துப்பாளையம் திமுக பேரூர் கழக செயலாளர்  துரைசாமி நீ என்னம்மா பத்தாம் வகுப்பு படிக்கிற பசங்களை போயி சின்னப்புள்ளை கிட்ட தப்பா நடந்துகிட்டாங்கன்னு கேஸ் போட்டு இருக்க பசங்க இதை விளையாட்டு தானே பண்ணி இருப்பானுங்க இதை பெருசு படுத்தாமல் விட்டுவிடு இல்லைன்னா நான் வேற மாதிரி பேச வேண்டி இருக்கும் என இன்ஸ்பெக்டர் செல்லத்தை பார்த்து மிரட்டும் தோனியில் ஒருமையில் பேசினார்.


இவர் பேச்சை கேட்ட இன்ஸ்பெக்டர் செல்லம் ஐயா வழக்கு பற்றி விசாரணை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்க கொஞ்சம் பெண் காவலர்களுக்கு மரியாதை கொடுத்து பேசுங்க சற்று வெளியே போய் நின்னுங்க என சொல்லியதாக கூறப்படுகிறது. உடனே மீசை துரைசாமி இன்ஸ்பெக்டரை பார்த்து அப்படியா நான் யாருன்னு காட்டுறேன் உன்னை இந்த காவல் நிலையத்திலிருந்து வேலை விட்டு தூக்குகிறேன் என ஆவேசமாக பேசிய மீசை துரைசாமிக்கு மகளிர் இன்ஸ்பெக்டர் செல்லம் சற்றும் சளைக்காமல் நீ குளத்துப்பாளையம் திமுக செயலாளர் துரைசாமியை இருந்துட்டு போ முடிஞ்சா என்னை இந்த ஸ்டேஷனிலிருந்து மாத்தி பாரு இல்ல என்னுடைய இன்ஸ்பெக்டர் பதவி பிடுங்கி பாரு நான் இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் கிடையாது நீ யாரிடம் வேண்டுமானாலும் சொல்லு என்ன வேணும்னாலும் பண்ணு நான் என் கடமையை செய்கிறதுல கரெக்டா இருப்பேன் தப்பு செஞ்சா உங்களுக்கு கண்டிப்பா தண்டனை வாங்கி கொடுப்பேன் என்று திமுக நிர்வாகி என்றும் பார்க்காமல் தைரியமாக செல்லம் பேசினார்.



இன்ஸ்பெக்டர் செல்லத்தின் பேச்சுக்கு பதில் கொடுக்க முடியாத திமுக மீசை துரைசாமி இதோ பாரு நான் உன்னை மாத்தி விடுவேன் மாத்தி விடுவேன் என ஆதரவாளுடன் வடிவேல் படத்தில் வரும் காமெடி போல மிரட்டியபடியே நைசாக காவல் நிலையத்தை விட்டு சென்று விட்டார். அப்போது தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்லத்திடம் சண்டை போட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகி இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. 


தொடர்ந்தது சர்ச்சையில் சிக்கும் பேரூர் கழக செயலாளர் மீசை துரைசாமியை கட்சிப்பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ‌

No comments:

Post a Comment

Post Top Ad