சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது ஆட்டோ பறிமுதல். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 May 2023

சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது ஆட்டோ பறிமுதல்.


கோவை மண்டலம் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்திரவின் படி திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் நேற்று திருப்பூர் வாவிபாளையம் பகுதியில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தொடர்பான சோதனையில் ஈடுபட்டனர், அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கு உரிய சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த ஆட்டோவில் மூட்டை மூட்டையாக சுமார் 650 கிலோ ரேஷன் அரிசி இருந்தது ஆட்டோவில் வந்தவரிடம் போலீசார் விசாரித்தபோது அவர் சேடர் பாளையத்தைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 39) என்பதும் வாவி பாளையம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வட மாநில தொழிலாளர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது இதைத்தொடர்ந்து செல்வகுமாரை போலீசார் கைது செய்து சுமார் 650 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad