திருப்பூர் அவிநாசி ரோடு அம்மாபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே இரவு நேரத்தில் நாய் ஒன்று வாகனத்தில் அடிபட்டு நடுரோட்டில் இறந்து கிடந்தது இது தெரியாது அது வழியே வரும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை இருந்தது அது வழியே வந்த பொதுமக்கள் யாரும் அந்த நாயை அப்புறப்படுத்த முன் வராத நிலையில் அது வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த திருமுருகன் பூண்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் முதல் நிலை காவலர் பிரகாஷ் நடுரோட்டில் நாய் இறந்து கிடப்பதையும் இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதையும் இதனால் விபத்து ஏற்படும் என்று உடனடியாக மோட்டர் சைக்கிளை நிறுத்திவிட்டு அங்கிருந்த ஒரு வாலிபர் உதவியுடன் பிளாஸ்டிக் சாக்கில் கைகளால் அந்த நாயை எடுத்து போட்டு அப்புறப்படுத்தினார்.

மேலும் தனக்கு உதவிய அந்த வாலிபருக்கு காவலர் பிரகாஷ் நன்றி கூறினார் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்காமல் இருப்பதற்காக உடனடியாக நடுரோட்டில் இறந்து கிடந்த நாயை அப்புறப்படுத்திய காவலரின் மனிதாபிமான செயலை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

No comments:
Post a Comment