இந்த அணையில் மொத்த உயரம் 30 அடி. சமீபத்தில் பெய்த மழையால் அணையில் 24 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே இந்த அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கால்நடைகளுக்கான குடிநீர் தடையின்றி கிடைக்கவும், பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டும், தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டது. 2 அமைச்சர்கள் அதன்படி நல்லதங்காள் ஓடை அணையில் இருந்து நல்லதங்காள் ஓடை பிரதான கால்வாய் வழியாக வினாடிக்கு 35 கன அடியும், ஆற்று மதகு வழியாக வினாடிக்கு 25 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தண்ணீர் திறப்புக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்.மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டனர். இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், நல்லதங்காள் ஓடை அணை செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் கப்பையன் மற்றும் விவசாயசங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment