திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம், ஜோத்தம்பட்டி, வேடபட்டி, கருப்புச்சாமிபுதூர், உள்ளிட்ட பகுதிகளில் மே 29ஆம் தேதி மாலை, சூறாவளி காற்று மற்றும் மழையினால் தென்னை மரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் சேதம் அடைந்தது. தகவலறிந்த மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் C. மகேந்திரன் அவர்கள், மே 30ஆம் தேதி காலை நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்
மேலும் அரசு அதிகாரிகளிடம், விவசாயிகளுக்குஉரிய இழப்பீட்டு நிவாரண தொகை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். நிகழ்வில் அரசு அதிகாரிகள், மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவலிங்கம், வேடப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் துக்கைவேல், மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment