இந்த இடத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சிலர் மது குடித்து விட்டு அங்கேயே படுத்து கிடப்பதும் சீட்டு விளையாடுவதும் போன்ற சீர்கேடான செயல்களை செய்து வருகின்றனர். மற்றும் கடைவீதியில் உள்ள கடைக்காரர்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை பராமரிப்பின்றி கிடக்கும் பழைய அரசு கதர்துறை கட்டிடம் முன்பு கொட்டி விட்டு செல்வதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் குப்பைக்கிடங்கின் அருகில் உள்ள அரசு பள்ளியில் துர்நாற்றம் பரவுவதால், மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.மற்றும் இந்த வழித்தடத்தில் மக்கள் நடந்து செல்லவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மற்றும் பராமரிப்பின்றி கிடைப்பதால் விஷ ஜந்துக்கள் பாம்பு போன்ற உயிரினங்கள் குடியிருப்பு பகுதியில் தஞ்சம் அடைகின்றன ஆகவே அரசு நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அகற்றி பராமரிப்பு இன்றி கிடைக்கும் பழைய கட்டிடத்தை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
No comments:
Post a Comment