இந்த பேரணியில் தனியார் கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கையில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பதாகைகளுடன் புகையிலை தீமைகள் குறித்து கோசங்கள் எழுப்பி சென்றனர்.
தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர் பேரணியை தலைமை தாங்கி, கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் உடன் இருந்தார்.இந்த நிகழ்வில் பொன்னாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் திருமதி.தேன்மொழி, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் நேர்முக உதவியாளர் செல்வராஜ்,மாவட்ட நலக்கல்வியாளர் ராஜ்குமார், மாவட்ட புகையிலை ஆலோசகர் மருத்துவர் திருமதி.சௌமியா, உளவியலாளர் காஞ்சனா,சமூக ஆர்வலர் பிரவீன் குமார், வட்டார் சுகாதார மேற்பார்வையாளர் சௌந்தரராசு, சுகாதார ஆய்வாளர்கள் ராஜு,நவீன் ஆகியோர்கள் கலந்துகொண்டு நகராட்சி வளாகத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்..
No comments:
Post a Comment