திருப்பூர் பெருமாநல்லூரில், கடந்த 1970ம் ஆண்டு ஒரு பைசா மின் கட்டணத்தை குறைக்க கோரி நடந்த விவசாயிகள் போராட்டத்தில் அப்போதைய அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த விவசாய தியாகிகள் ராமசாமி கவுண்டர், மாரப்ப கவுண்டர் மற்றும் ஆயிக்கவுண்டர் ஆகியோர்களின் 53 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சங்க நிறுவன தலைவர் G.K. விவசாயமணி (எ) G.சுப்பிரமணி அவர்களின் தலைமையில் தியாகிகளின் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில் இருந்து PN ரோடு புதிய பேருந்து நிலையம் வழியாக 200 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும், பெரிய வேன்களிலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று பெருமாநல்லூரில் உள்ள நினைவு ஸ்தூபியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில, மாநகர, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் கிளை சங்க நிர்வாகிகள், மகளீரணியினர், பொறுப்பாளர்கள் , தொழிலாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன்
No comments:
Post a Comment