திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிரீன்பீல்டு இண்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச யோகா தினம்,உலக இசை தினம் மற்றும் தேசிய சிறு தான்ய வருடம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு சிறப்பு விருந்தினர் நிராமய யோகா வித்யா கேந்திராவின் நிறுவனர், திரு.இராம கோபாலரத்தினம் பள்ளி முதல்வர், திருமதி.பிரியா பாஸ்கரன், பள்ளியின் கல்வி இயக்குனர் திருமதி நளினி சுப்ரமணியன், யோகா ஆசிரியர் ஷண்முகம், பள்ளி நிர்வாக அலுவலர் இராஜசேகரன் ஆகியோர் குத்துவிளக்கினை ஏற்ற விழா துவங்கியது.
முதல் நிகழ்வாக உலக இசை தினம் மாணவர்கள் ,ஆசிரியர்கள் இசையமக்க நிகழ்வின் தொடர்ச்சியாக பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் நிகழ்த்திய மெகா யோகாவின் போது ஒவ்வொரு ஆசனத்தின் போதும் அதன் பயன்களை சிறப்பு விருந்தினர் விளக்க அனைவருக்கும் யோகாவின் முக்கியதுவத்தை நிகழ்வில் கலந்து கொண்ட சுமார் 800க்கும் மேற்பட்டோர் தெரிந்து கொண்டனர்.
No comments:
Post a Comment