திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது மண்டலம் 14வது வார்டு கல்யாண சுந்தரம் வீதியில் உள்ள தண்ணீர் டேங்க் அருகில் உள்ள இரும்பு மின் கம்பம் இதில் உள்ள தெரு விளக்கு ஒரு மாதமாக எரியவில்லை இதனால் அந்த பகுதி பொது மக்கள் இருட்டில் நடமாட சிரம படுகிறார்கள் இது பற்றி மாநகராட்சி புகார் எண்ணிற்கு புகைப்படத்துடன் புகார் செய்யப்பட்டது ஆனால் புகார்தாரர் குறிப்பிட்ட அந்த மின் கம்பத்தில் மின் விளக்கை சரி செய்யாமல் வேறு ஏதோ ஒரு கம்பத்தின் தெரு விளக்கை சரி செய்து விட்டு இந்த புகார் முடிக்கப்பட்டுள்ளது.
இந்த கம்பத்தின் தெருவிளக்கு சரி செய்யப்பட்டுள்ளது என்று புகார் தாரருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது இது பற்றி மீண்டும் புகார் செய்தும் இந்த பகுதியில் தெருவிளக்கு சரி செய்யப்படவில்லை இருட்டில் மூழ்கிக் கிடக்கிறது இதனால் பொதுமக்கள் வயதானவர்கள் இரவு நேரங்களில் நடமாட மிகவும் சிரமப்படுகின்றனர் திருப்பூர் மாநகராட்சி தெரு விளக்கு பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment