முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர்.கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை போற்றும் வகையில் 14வது வார்டு திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்,மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 14 வது வார்டு நேதாஜி நகர் மற்றும் நேரு நகர் வார்டு திமுக கவுன்சிலர் முட்டாண்டி தலைமையில் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தினர் பின்னர் நேரு நகர் நேதாஜி நகர் குளத்து புஞ்சை தெரு ஆகிய பகுதியில் உள்ள நான்கு அங்கன்வாடி மையத்திற்கு தேவையான விலையில்லா மின்விசிறி தண்ணீர் தேக்கி வைக்கும் தொட்டி இரண்டு குடங்கள் பெஞ்ச் அங்கன்வாடி குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் அப்பாஸ் அலி, ரவி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment