தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரம் நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவர் கே.வெங்கிடுசாமி தலைமை தாங்கினார். மாநில தலைவர் மா.பாலசுப்பிரமணியன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் சு.செந்தில்நாதன், இல.தில்லையப்பன், வி.தங்கவேல், சி.மாரிமுத்து, என்.சிவக்குமார், ஏ.மணிமொழி, ஆர்.செல்வக்குமார் மற்றும் அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவர் கே.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எஸ்.முருகசாமி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment