திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மாதம் ஒரு ஞாயிறு தமிழ் பாரம்பரிய கலை கலாச்சார திருவிழா கொண்டாட்டம்! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 June 2023

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மாதம் ஒரு ஞாயிறு தமிழ் பாரம்பரிய கலை கலாச்சார திருவிழா கொண்டாட்டம்!


திருப்பூர் மாநகராட்சியின் 2023-2024 வரவு செலவு (BUDJET) கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது இதன்படி திருப்பூர் மாநகராட்சியில் மாதம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை கலாச்சாரங்களை பாதுகாக்கவும், பொது மக்கள் இளைப்பாறும் வகையில் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுத் திருவிழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளுடன் கூடிய சிறப்பான பொழுது போக்கு திருநாளாக திறன்மிகு திருப்பூர் மாநகரில் கொண்டாடுவதற்கான ஆலோசனை கூட்டம், மேயர் என் தினேஷ் குமார் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப, மாநகராட்சி அலுவலர்களும், பாரம்பரிய கலைஞர்கள், உள்ளூர் பாடகர்கள், இசை அமைப்பாளர்கள், நாட்டுப்புற நடனக் கலைஞர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள், தன்னார்வலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், தனியார் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.   


- மாவட்ட செய்தியாளர்  அ.காஜா மைதீன்

No comments:

Post a Comment

Post Top Ad