தாராபுரத்தில் செல்வ விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து ரூ.30 ஆயிரத்தை முகமூடி அணிந்த ஆசாமி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 June 2023

தாராபுரத்தில் செல்வ விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து ரூ.30 ஆயிரத்தை முகமூடி அணிந்த ஆசாமி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாநகரில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே உழவர் சந்தை செயல்படுகிறது. இந்த உழவர் சந்தைக்கு நேற்று காலை வந்த பொதுமக்கள் செல்வவிநாயகர் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கோவிலுக்கு போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.


அப்போது பச்சை நிற உடையில் முகமூடி அணிந்த ஆசாமி ஒருவர் கோவிலின் தடுப்பு கம்பிமேல் ஏறி, கோவிலுக்கு குதிப்பதும், பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் ஒரு கேமராவை உடைப்பதும் பதிவாகி உள்ளது. பின்னர் அந்த ஆசாமி கட்டிங் பிளேடு, இரும்பு ராடு கொண்டு கோவில் உண்டியலின் பூட்டுகளை உடைத்து அதில் இருந்து பணத்தை கொள்ளை அடித்து செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. 


மேலும் உண்டியலில் ரூ.30 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றமுகமூடி ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். தாராபுரத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை முகமூடி அணிந்த ஆசாமி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad