இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.12 ஆம் வகுப்பில் 533 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பெற்ற டி. சத்குரு , 516 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பெற்ற மாணவி பொன்மணி சுவாதி, 514 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்ற மாணவி மோனிகா மற்றும் பத்தாம் வகுப்பில் 461 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற மாணவன் முகமது ஹசன், 461 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்ற மாணவி அ.சகாரா ரமலான், 456 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பெற்ற மாணவி வி.நிஷா, 443 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பெற்ற மாணவி மு.பி.அணீஸ் பாத்திமா உள்ளிட்ட மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட பொதுச்செயலாளர் எஸ் ஜீனத், மாவட்ட செயலாளர் மற்றும் மங்கலம் ஆறாவது வார்டு உறுப்பினர் எ. ரபியத்துல் பசிரியா, மாவட்ட பொருளாளர் எம் சாகின் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளை ஊக்கிவுக்கும் விதமாக கேடயம் வழங்கி சிறப்பித்தார்கள்.
மேலும் வெற்றி பெற உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகளையும், பெற்றோர்களையும், வாழ்த்தி மாவட்டத் தலைவர் R.சஹானா சிறப்புரையாற்றினார் மற்றும் இந்நிகழ்வில் ஆசிரியர் சங்க செயலாளர் சலீம் மற்றும் குர்ஷித், கதீஜா, ஆபிதா பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment