திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது இதையொட்டி திருப்பூர் மாநகராட்சி ஒரு சிறப்பு திட்டம் வகுத்து நொய்யல் ஆற்றின் இருபுறமும் ஆண்டிபாளையம் முதல் காசிபாளையம் வரை சாலைகள் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது இதற்கு தேவைப்படும் நிலத்தை மாநகராட்சிக்கு தனியார் தானமாக வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்த சின்னச்சாமியின் குடும்பத்தினரான குழந்தைவேல் அபர்ணா தம்பதிகள் சாலை அமைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தங்களுக்கு சொந்தமான ரூ 5 கோடி மதிப்புள்ள 8.6 சென்ட் பரப்பளவு நிலத்தை தானமாக மாநகராட்சிக்கு வழங்கியுள்ளனர் இதற்கான ஆவணங்களை குழந்தைவேல் அபர்ணா தம்பதிகள் திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் அவர்களை நேரில் சந்தித்து கொடுத்தனர்.
ஆவணங்களை பெற்று கொண்ட மேயர் குழந்தைவேல் அபர்ணா தம்பதிகளுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment