தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், திருப்பூர் மாநகராட்சி, 55-வது வார்டு, பெரிச்சிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்தாண்டு கல்வியை சிறப்புடன் துவங்கிட மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் வழங்கினார்.
இந்நிகழ்வில், தொமுச மாநில துணைச் செயலாளரும்,தெற்கு திமுக மாநகர செயலாளருமான டி.கே.டி. மு.நாகராசன், பகுதி அவைத்தலைவர் தம்பி குமாரசாமி, வட்டக் கழக செயலாளர்கள் ஆதவன் முருகேசன், மு.நந்தகோபால் 55 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆனந்தி, முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன்
No comments:
Post a Comment