திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமாகிய கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை தமிழகமெங்கும் சிறப்பாக திமுகவினர் கொண்டாடிக் கொண்டாடி வருகிறார்கள் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகர திமுக சார்பாக மூன்றாவது வார்டில் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் தமிழ்நாடு செய்தி விளம்பரத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திமுக கொடியினை ஏற்றி வைத்து கலைஞர் மு கருணாநிதி அவர்களின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார், இந்த நிகழ்வில் திருப்பூர் மாநகராட்சி 4 ஆவது மண்டல தலைவர் இல. பத்மநாபன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு. சண்முகசுந்தரம், திமுக மாவட்ட அவைத் தலைவர் இரா ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகர திமுக செயலாளர் சி.வேலுச்சாமி மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment