மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளையொட்டி திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளரும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய க. செல்வராஜ் தலைமையில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி திருப்பூர் வடக்கு பகுதி முழுவதும் சிறப்பாக கொண்டாடினர்.
அந்த வகையில் 14வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் 14வது வார்டு திமுகழக செயலாளர் ரத்தினசாமி பாத்திர தொழிற்சங்க பொறுப்பாளர் வேலுச்சாமி பகுதி துணை செயலாளர் மணிமாறன் மற்றும் நிர்வாகிகளும் மகளிர் அணியினரும் திமுக கொடி ஏற்றி வைத்து கலைஞர் மு கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment