திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டார விவசாய நிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும், அமராவதி அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதாலும், நடவு முதல் அறுவடை வரை இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாலும், நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது அமராவதி அணையின் நீர் இருப்பு மொத்தமுள்ள 90 அடியில் 64.05 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 240 கன அடியாக உள்ளது.
மேலும் அணையிலிருந்து வினாடிக்கு 270 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அமராவதி ஆற்றிலிருந்து ராஜவாய்க்கால்கள் மூலம் திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு நெல் சாகுபடிக்காக நாற்றங்கால்கள் அமைக்கும் பணியில் தற்போது விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment