திருப்பூரில் ரயில் நிலையம் அருகில் உள்ள காதர்பேட்டை இந்தப் பகுதியில் பனியன் ஆடைகள் விற்பனை செய்யும் 500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் இந்த பகுதியில் வெளி மாநில வியாபாரிகள் சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் மக்கள் பணியன் துணி வகைகளை வாங்கிச் செல்வார்கள் இதில் ஒரு பகுதியாக நஞ்சப்பா பள்ளி எதிரில் 50க்கும் மேற்பட்ட பனியன் கடைகள் காலி இடத்தில் மரம் மற்றும் தகரத்தாலான கொட்டகைகள் அமைத்து மின்சாரத்திற்கு ஜெனரேட்டர் உதவியுடன் வியாபாரம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 9:30 மணிக்கு மேல் திடீரென தீ பற்றிய நிலையில் தீ மலமலவென்று பரவி பனியன் பஜார் முழுவதுமாக பற்றி எரிந்தது தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர் இன்று காலை தீப்பிடித்து உரு குலைந்து போன சம்பவ இடத்திற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் எம்எல்ஏ நேரில் வந்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வியாபாரிகளுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.
அப்போது வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத்தருவார் எங்கள் எம் எல் ஏ என்று நம்பிக்கையுடன் கூறினார்கள்.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன்.
No comments:
Post a Comment