திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட ராமநாதபுரம் ஊராட்சி கிருஷ்ணாபுரம் சுரபி நர்சரி எதிரே குடிநீர் குழாய் உடைந்ததால் செயற்கை நீரூற்று போல பீச்சி அடித்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது அந்த பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் இளைஞர்கள் அதில் குளித்து மகிழ்கின்றனர் இந்த குடிநீர் குழாய் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு வரும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
மேலும் தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருவதை தடுக்க அதிகாரிகள் உடனடியாக இந்த உடைப்பை சரி செய்ய வேண்டும் மேலும் குடிநீர் குழாய்களை பதிக்கும் பொழுது சரியான முறையில் தரமான முறையில் பதிக்க வேண்டும் அதிகாரிகள் பணிகள் நடக்கும் இடங்களில்நேரடி கண்காணிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்
- திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment