திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் ஸ்ரீ வெங்கட கிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் புதிய கல்வியாண்டிற்கான துவக்க விழாவும், அரசு பொது தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பதக்கங்களும் வழங்கும் விழாவும் இன்று காலை நடைபெற்றது.
விழாவில் தலைமையாசிரியர் திரு.ரவிச்சந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார். கணியூர் பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி பத்மநாபன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் மாணவ மாணவிகளுக்கு மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் பள்ளிக்குழுத் தலைவர் மற்றும் செயலர் கே. ஈஸ்வரசாமி அவர்கள் வழங்கினார்.
விழாவில் செல்வி ஈ. ஹரி வர்ஷா மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவம் செய்தார். பரிசு பெற்ற மாணவிகள் சார்பாக சுபஹரிணி ஏற்புரை வழங்கினார். உதவித்தலைமை ஆசிரியர்முரளி நன்றி உரை கூறுனார்.
No comments:
Post a Comment