மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது திருப்பூரில் வாலிபாளையம் முருகன் கோவில் அருகில் உள்ள டைஸ்& கெமிக்கல் அசோசியேசன் ஹாலில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் ஐந்தாம் ஆண்டு விழா நடைபெற்றது விழாவிற்கு திருப்பூர் மாவட்ட தலைவர் க.மகேந்திரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரிதா ஆகியோர் தலைமை தாங்கினார்கள் விழாவில் சட்டவிரோத கும்பல்களை சாமானிய மக்கள் சமாளிப்பது எப்படி என்று நிறுவனர் மற்றும் தலைவருமாகிய இப்ராஹிம் பாதுஷா எழுச்சி உரையாற்றினார் மேலும் அவர் உரையில் மைக்ரோ பைனான்ஸ் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் தனிநபர் கடன் கிரெடிட் கார்டு கடன் புதுப்பிக்கப்பட்ட கந்து வட்டியாக மகளிர் குழு கடன் என்ற போர்வையில் மக்களுக்கு கடன் திணிக்கப்பட்டு கடன் கட்ட முடியாத சூழ்நிலையில் படித்த இளைஞர்களை ரவுடிகளாக மாற்றி மக்களை ஆபாசமாக மிரட்டி பண வசூல் செய்ய வைக்கின்றனர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்ட விரோதமாக மக்களை மிரட்டி ஆபாசமாக திட்டி பண வசூல் செய்யும் சட்ட விரோத குண்டர்களை தடை செய்ய வேண்டும் ஆர் பி ஐ சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வசூல் செய்யும் நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சட்டவிரோத குண்டர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கூறினார் மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழக சமூக பொது நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மக்களுக்கு நேரடி களத்தில் சிறப்பாக போராடி களப்பணி ஆற்றிய நிர்வாகிகளுக்கு விருது வழங்கப்பட்டது விழாவில் கழகப் பொதுச் செயலாளர் வேல்முருகன் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கழக அமைப்பு செயலாளர் சீனிவாசன் முதன்மை செயலாளர் பிரகாஷ் தலைமை நிலைய செயலாளர் யுவராஜ், செய்தி தொடர்பாளர் அபுதாஹிர், இளைஞரணி தலைவர் அப்துல் பாரூக், இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், மற்றும் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் திருப்பூர் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment