தமிழக முழுவதும் ஹஜ் பயணம் அழைத்துச் செல்வதாக கூறி மோசடி நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் புகார் மனு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 June 2023

தமிழக முழுவதும் ஹஜ் பயணம் அழைத்துச் செல்வதாக கூறி மோசடி நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் புகார் மனு.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சமூக ஆர்வலர் ஜாபர் சாதிக் தமிழக முதல்வர் மற்றும் தமிழக காவல்துறை தலைவர் ஆகியோருக்கு ஒரு புகார் மனு ஒன்று  அனுப்பி உள்ளார். அதில் கூறியுள்ளதாவது:- இப்பவும் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் திருநாள் இஸ்லாமிய மக்கள் மத்தியில் மிகவும் விமர்சியாக கொண்டாடி வருகின்றனர். 

இப்பண்டிகையை இஸ்லாமிய மக்கள் அவர்கள் புனித ஸ்தலமான சவுதி அரேபியாவில் உள்ள மக்காவுக்கு சென்று அவர்களின் இறை கடமையை நிறைவேற்றுவது வழக்கம் இதை பயன்படுத்தி தமிழகத்தில் பல்வேறு மோசடி கும்பல்கள் ஹஜ் பயணம் அழைத்து செல்வதாக கூறி தமிழக முழுவதும் மக்களிடம் குறைந்த விலையில் அழைத்து செல்வதாக சொல்லி 4 லட்சம் முதல் 7 லட்சம் வரை பணத்தைப் பெற்றுக் கொண்டு கடைசி நேரத்தில் எங்களுக்கு கோட்டா வரவில்லை என்று கூறி பணம் கட்டிய மக்கள் எல்லாம் பயணத்திற்கு தயாராக உள்ள சூழ்நிலையில் ஏர்போர்ட் வரை அழைத்து வந்து உங்களுக்கு பயணம் ரத்து ஆகிவிட்டது என்று கூறி மிகவும் மன ஊளைச்சல் ஏற்படுத்தி பணத்தையும் ஏமாற்றி மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்‌. 


தமிழகத்தில் இயங்கக்கூடிய ஹஜ் உம்ரா சர்வீஸ் நிறுவனங்கள் எல்லாம் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக உள்ளதா என்று என்பதை ஆய்வு செய்து வரக்கூடிய காலங்களில் எந்த ஒரு இஸ்லாமிய மக்களும் பாதிக்கப்படாத வண்ணம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் 2019 முதல் 2023 வரை அங்கீகரிக்கப்படாத ஹஜ் நிறுவனங்களிடம் பணம் கட்டி ஏமாந்த மக்களை கண்டறிந்து மக்களுக்கு நிவாரணம் பெற்று தர வேண்டும் மற்றும் இந்த வருடம் குரோம்பேட்டையில் இயங்கி வரும் அரபா ஹஜ் டிராவல்ஸ் உரிமையாளர் யூசுப் என்பவர் 42 பயணிகளை ஏர்போர்ட் வரை அழைத்து வந்து பயணத்தை உறுதி செய்யாமல் பயணிகளிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக பேஸ்புக் வாட்ஸ்அப் போன்ற வலைதளங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.


மேற்படி செய்தி உண்மை எனில் அரஃபா ஹஜ் டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் மற்றும் தமிழக முழுவதும் தனியார் ஹஜ் நிறுவனங்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தால் பணம் திருப்பி தரமாட்டோம் என்று மோசடி செய்தவர்கள் கூறி வருவதாக தெரியவருகிறது எனவே பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் திரும்ப கிடைக்க உதவி செய்யவும் மற்றும் வரக்கூடிய காலங்களில் இது போன்ற மோசடி கும்பல்களிடம் இருந்து மக்களை காக்க வேண்டி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று புகார் மனு அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad