பாலியல் தொல்லை டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது வழக்குப்பதிவு - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 June 2023

பாலியல் தொல்லை டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது வழக்குப்பதிவு


தாராபுரத்தில் மருந்து கடை பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை டாஸ்மாக் மேற்பார்வையாளர் மீது வழக்குப்பதிவு


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேவேந்திரர் தெருவை சேர்ந்த 22 வயதான இளம்பெண், தாராபுரம் சர்ச் சாலையில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். பாலியல் தொல்லை சம்பவத்தன்று கடையின் உரிமையாளர் முருகன் வெளியே சென்றிருந்த நிலையில், கடைக்கு முருகனின் நண்பரான தாராபுரம் தளவாய்பட்டி னத்தை சேர்ந்த பார்த்தீபன் என்பவர் வந்தார். அப்போது பார்த்தீபனுக்கும், இளம்பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டது. இது குறித்து அந்த இளம்பெண் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் , தன்னை பார்த்தீபன் ஆபாசமாக பேசியதாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறியுள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பத்மபிரியா, பார்த்தீபன் மீது பெண் வன் கொடுமை சட்டம் மற்றும் ஆபாசமாக பேசியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே பார்த்தீபன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தலைமறை வான பார்த்தீபன் தாரா புரம் பூளவாடி சாலையில் உள்ள தேர்பாதை டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தாராபுரம் செய்தியாளர் ஜாஃபர் சாதிக் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad