மெடிக்கலில் காலாவதியான மருந்து வாங்கி உட்கொண்ட சிறுமி ஆபத்தான நிலை - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 June 2023

மெடிக்கலில் காலாவதியான மருந்து வாங்கி உட்கொண்ட சிறுமி ஆபத்தான நிலை


மெடிக்கலில் காலாவதியான மருந்து வாங்கி உட்கொண்ட சிறுமி ஆபத்தான நிலையில் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த காளிபாளையம் பகுதியில் அலாவுதீன் என்பவரது 15 வயது மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அருகில் இருந்த மகேஷ்வரன் என்பவருக்கு சொந்தமான (சன்) தனியார் மருந்து கடையில் மாத்திரை மற்றும் இருமல் மருந்து வாங்கி கொடுத்துள்ளனர். அதனை உட்கொண்ட சிறிது நேரத்தில் சிறுமிக்கு நடுக்கம், வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெற்றோர் சிறுமியை தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   2020 ம் ஆண்டு காலாவதியான மற்றும் பெரியவர்களுக்கு வழங்கும் கூடுதல் டோஸ் மாத்திரைகளை வழங்கியதால் பாதிப்பு என தெரியவந்துள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தாராபுரம் செய்தியாளர் ஜாஃபர் சாதிக் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad