மேட்டுப்பாளையம் அரசு பேருந்து நிலையத்தில் நடத்துனராக பணியாற்றி வருபவர் அறிவழகன் இவர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் கர்ணா ஹோட்டல் அருகில் தனது சைக்கிள் பயணத்தின் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கினார் புகலூர்,அன்னூர்,கருமத்தம்பட்டி, காரணம்பேட்டை பல்லடம், பொங்கலூர்,அவிநாசிபாளையம், கொடுவாய்,வழியாக இரவு 9மணிக்கு தாராபுரம் வந்து அடைந்தார். அறிவழகனுக்கு நகராட்சி அலுவலக வளாகத்தில் வைத்து நகரமன்ற தலைவர் பாப்புகண்ணன், நகர செயலாளர் முருகானந்தம், ஆகியோர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து நோபல் புக் ஆப் வேர்ல்ட் சாதனை புத்தகத்தில் உலக சாதனை படைத்தார். சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை அரவிந்த் சிவா பயிற்சி ஆசிரியர் வழங்கினர்.சாதனை படைத்த அறிவழகன் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து விபத்துகளை தவிர்ப்போம் என்ற கருத்துக்களை வலியுறுத்தி வரும் வழியெங்கும் பொது மக்களுக்கு போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
No comments:
Post a Comment