தாராபுரம் பகுதியில் வானில் மர்மப்பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.இதனால் பொதுமக்கள் பதற்றத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 June 2023

தாராபுரம் பகுதியில் வானில் மர்மப்பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.இதனால் பொதுமக்கள் பதற்றத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர்.


திருப்பூர் மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை பெய்வதற்கான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனால் வானம் வெள்ளை கலந்த கருமேகங்களுடன் காணப்படுகிறது. இந்த நிலையில் தாராபுரம் பகுதியில் நேற்று பிற்பகல் 11 மணியளவில் வானில் ஜெட் விமானம் செல்வது போல் பீதியை கிளப்பும் சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று வெள்ளை நிறத்தில் புகையை கக்கிக் கொண்டு வட்டமிட்டது. 

இந்த சத்தம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.சில நிமிடத்தில் அந்த மர்ம பொருள் பயங்கர வெடி சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் வானில் வெண் புகை சூழ்ந்து கொண்டது. இந்த பயங்கர வெடிச் சத்தம் தாராபுரம் சுற்று வட்டாரம் மட்டுமின்றி காங்கயம், வெள்ளகோவில், கரூர் உள்ளிட்ட பகுதியில் பொதுமக்களிடையே உணரப்பட்டது. இதனால் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், வீடு மற்றும் கட்டிடத்தில் தங்கி இருந்தவர்கள் பூகம்பம்ஏற்பட்டு விட்டதோ என எண்ணி உயிருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடினர். 


வானில் ஏற்பட்ட சத்தம் என்று உறுதி செய்த பின்னர் நிம்மதியடைந்தனர். இது குறித்து தாராபுரம் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- ஆய்வு செய்ய வேண்டும் இது போன்ற சத்தத்தை நாங்கள் இதுவரை கேட்டது இல்லை. அந்த சத்தத்தை கேட்டதும் குலைநடுங்கியது. சிறிது நேரத்தில் அந்த மர்ம பொருள் வெடித்தது போன்று உணந்ததோம். இதனால் எங்களால் நிம்மதியாக வீட்டிற்குள் இருக்க முடியவில்லை. உயிருக்கு பயந்து வெளியே ஓடிவந்தோம். வெடித்தது ஜெட் விமானமா? அல்லது மர்ம பொருளா என தெரியவில்லை. எனவே நமது செயற்கை கோளை திருப்பி, தாராபுரம் பகுதியில் வெடித்தது என்ன என்று துல்லியமாக ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது போல் கடந்தஆண்டும் வானில் இந்தசத்தம் ஏற்பட்டதாக சிலர் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad