சாமளாபுரம் பேரூராட்சி சார்பாக பொது மக்கள் மாணவ, மாணவிகள் இடையே மக்கும் குப்பை, மக்காத குப்பை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி சாமளாபுரம் பேரூராட்சியின் சார்பாக மக்கும் குப்பை மக்காத குப்பை பற்றி பொது மக்களிடத்திலும் மாணவ, மாணவிகளிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி மற்றும் துணைத் தலைவர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சாமளாபுரம் செயலாளர் ஐந்தாவது வார்டு உறுப்பினர் வேலுசாமி மற்றும் சாமளாபுரம் பேரூராட்சியின் அனைத்து வார்டு உறுப்பினர்களுடன் அருள்மிகு வாழைத்தோட்ட அய்யன் கோவில் உயர்நிலைப் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களுடன் மாணவ, மாணவிகளிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை பற்றி கலையுடன் கூடிய நகைச்சுவையான கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் ஏ வி ஏ டி பள்ளியில் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment