திருப்பூர் மாநகராட்சி ஒண்ணாவது மண்டலம் வெங்கமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான சலவை ஆலையிலிருந்து நச்சு வாயு வெளியேறிய நிலையில் 15 க்கும் மேற்பட்ட குழந்தைகள் முதியவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது இது அறிந்த திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க. செல்வராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் சுகாதார அதிகாரிகள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விரைந்து சென்று பாதிக்கப்பட்டோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் குழந்தைகளை தனியார் மருத்துவமனைக்கு செல்வராஜ் எம்எல்ஏ தனது காரில் அனுப்பி வைத்தார் இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம்எல்ஏ நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார் மேலும் மருத்துவர்களிடம் குழந்தைகளின் உடல்நலம் பற்றி விசாரித்தார்
- திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment